Car Rammed into Parked Lorry: சாலையோரம் நின்ற லாரி மீது அதிவேகத்தில் மோதி நொறுங்கிய கார்; மூவர் பலி.!
நேர்காணலை நிறைவு செய்துவிட்டு பெண்மணி குடும்பத்துடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஜூலை 08, எலுரு (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எலுரு மாவட்டம், துவாரகா திருமலா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இன்று கார் ஒன்று லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கியது. அதிவேகத்தில் வந்த கார், லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான காயத்துடன் அலறித்துடித்தனர். Mumbai Local Train: இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்; இரண்டு கால்களும் துண்டாகிய பரிதாபம்.!
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆந்திராவில் பலி:
விபத்து குறித்து தகவல் அறிந்த எலுரு மாவட்ட காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ரசோல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. Chennai City Commissioner: சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.!
பலியானவர்களின் விபரம்:
இந்த கோர விபத்து, நின்றுகொண்டு இருந்த லாரியின் மீது கார் மோதியதில் ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ராசபட்டுணி பாக்யஸ்ரீ (26), ரசனிபட்டுணி நாகனிதின் குமார் (2), போம்மா கமலாதேவி (53) என்பது தெரியவந்தது. ஓட்டுநர் வம்சி மற்றும் நாகசண்முகம் ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். ஐடி ஊழியரான பாக்யஸ்ரீ, வேறொரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்று, பின் மீண்டும் வீடு திரும்பியபோது சோகம் நடந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

