ஜூலை 08, மும்பை (Maharashtra News): தானே நோக்கி பயணம் செய்ய காத்திருந்த இளம்பெண், இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து தனது இரண்டு கால்களையும் இழந்த சோகம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடர் மழை பெய்தது. இதனால் தற்போது நகரின் பல இடங்களில் வெள்ளம் தேங்கி இருக்கிறது. மேலும், புறநகர் ரயில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மும்பையில் உள்ள பெலாபூர் (Belapur Railway Station) இரயில் நிலையத்தில், தானே செல்வதற்காக பயணிகள் பலரும் காத்திருந்தனர். Sharda River Flood: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள்; போக்குவரத்து துண்டிப்பு.. 20 கிராமங்களின் நிலை என்ன?.!
ஏறி-இறங்கிய இரயில் சக்கரங்கள்:
மழை காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து ரயில்கள் வராததால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டமானது கடுமையாக அலைமோதியது. இதனிடையே நீண்ட நேரம் கழித்து வந்த ஒரு ரயிலை பிடிக்க பயணிகள் அனைவரும் முண்டியடித்து கொண்டு ஏறி இருந்தனர். இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் பெண்மணி ஒருவர் தவறி விழுந்த நிலையில், அவரின் மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியது.
துண்டாகிய கால்கள்:
இந்த சம்பவத்தில் அவரது கால்கள் இரண்டும் துண்டாகிப்போயின. சில நிமிட போராட்டத்திற்கு பின்னர் ரயிலை பின்னோக்கி இயக்கி பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். தற்போது பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட பெண் பயணி தானே நோக்கி பயணிக்கவிருந்த நிலையில், அவர் விபத்தில் சிக்கியது நடந்துள்ளது. மேற்படி விசாரணை நடந்து வருகிறது. பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர். இந்த சம்பவம் சக பயணிகளுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.