Merugu Nagarjuna: முன்னாள் அமைச்சர் மீது இளம்பெண் பாலியல் புகார்; பரபரப்பாகும் அரசியல்களம்.. அதிரும் ஆந்திரா.!
ரூ.90 இலட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு, அரசு வேலை பெற்றுத்தருகிறேன் என இளம்பெண்ணை முன்னாள் அமைச்சர் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
நவம்பர் 03, குண்டூர் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம், தாடப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று இளம்பெண் ஒருவர், முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி (YSRCP Party Minister) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் மெருகு நாகர்ஜுனாவுக்கு (Merugu Nagarjuna) எதிராக பாலியல் புகார் ஒன்றை வழங்கினார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர், முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். 3-Year-Old Girl Rape & Murder: சாக்லேட் தருவதாக 3 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. 22 வயது உறவுக்கார இளைஞர் அதிர்ச்சி செயல்.!
மெல்லக்கொல்லும் விஷம் வைத்து ஆசிரியை கொலை?
இதுகுறித்து பெண்மணி வழங்கிய புகாரில், நாகர்ஜுனா அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பெண்ணுக்கு அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.90 இலட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்தது, வேலை கேட்டபோது தனிமையில் அழைத்து பலாத்காரம் செய்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே கூறினால், விசாகப்பட்டினத்தில் பழங்குடியின ஆசிரியை ஒருவரை மெல்லக்கொல்லும் விஷம் வைத்து கொலை செய்ததைப்போல, உண்மையும் கொலை செய்திடுவேன் என அமைச்சரின் உதவியாளர் முரளி மிரட்டல் விடுத்துள்ளார்.
அடிமேல் அடி வாங்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்:
இந்த விஷயம் குறித்து தற்போது பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதியைச் சேர்ந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து உண்மை அம்பலமாகவே, அம்மாநில அரசியலில் பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது. ஏற்கனவே ஆட்சியை இழந்து, தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள ஜெகன் மோகன் கட்சி அடுத்த தேர்தல் வரை தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், தற்போது அடுத்தடுத்த சர்ச்சை விசயத்திற்குள் சிக்கி வருகிறது.
(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

