Gujarat 2 Youths Died Accident Highspeed Reels (Photo Credit: @Prateek34381357 X)

மே16, வசத் (Gujarat News): தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல முன்னேற்றங்களை அளித்தாலும், அதனை சரியாக கையாளத் தெரியாத குழுவிடம் இருந்து எதிர்வரும் முடிவுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கின்றன. அந்த வகையில், நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் என்ற நிலையில் இருக்க, அந்த இளைஞர்கள் கூட்டமோ செல்போன், மதுபோதை போன்று பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகி தங்களின் திறமையை வளர்க்காமல் ஊரைச்சுற்றி வருகிறது. சமூக வலைத்தளங்களில் தன்னை பிரபலமாக்க ஒவ்வொரு இளைஞர்களும் மேற்கொள்ளும் தனிப்பட்ட முயற்சிகள் அவர்களின் உழைப்புக்கான ஊதியம் எனினும், சில நேரங்களில் அவர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து அம்முயற்சிகளை எடுக்கின்றனர். இவ்வாறான முயற்சிகள் சில நேரம் விபரீத முடிவுகளையும் சந்திக்க காரணமாக அமைகின்றன. Negligence of Government Bus Driver: எச்சரிக்கையை மீறி பயணிகளின் உயிருடன் விளையாடிய அரசுப்பேருந்து ஓட்டுநர்; நடந்தது என்ன? வைரல் வீடியோ உள்ளே.!

கட்டுப்பாட்டை (Gujarat Road Accident Captured on Reels Live Video) இழந்து மரத்தில் மோதி துயரம்: இந்நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள வசத் மாவட்டத்தில், 5 இளைஞர்கள் குழு காரில் 160 கி.மீ வேகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தது. இவர்கள் தங்களின் வாகனத்தில் இருந்தவாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி லைவ் வீடியோவையும் பதிவு செய்து இருக்கின்றனர். இதனிடையே, கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 2 பேர் காயத்துடன் உயிர்பிழைக்க, அவருடன் பயணித்த நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நண்பர்கள் குழு மே மாதம் 2ம் தேதி நள்ளிரவு நேரத்தில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு தங்களின் காரில் பயணம் செய்யும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி விபத்து நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த இளைஞர்கள் குழுவில் இருவர் அமன் மெஹபூபாய் ஷேக் மற்றும் சிரக்குமார் கே. படேல் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.