மே 16, வள்ளியூர் (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மக்களை கடுமையாக வாட்டி வதைத்த கடும் வெயிலில் இருந்து விடுதலை அளிக்க, அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்திற்கு பின்னர் பெய்யும் கோடை மழை என்பதால், மக்களின் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீர்: நெல்லை (Nellai Rains) மாவட்டத்தில் வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மற்றும் முன்தினத்தில் நல்ல மழை பெய்தது. இதனால் வள்ளியூரில் உள்ள போக்குவரத்து சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி உள்ளது. அவ்வழியே வாகனங்கள் சென்று வர வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், நீர் தேங்கி இருந்ததால் பல வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. TN Weather Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; காலையில்லேயே வெளுத்து வாங்கும் கனமழை.!
அரசுப்பேருந்து ஓட்டுனரின் அலட்சியம்: இந்நிலையில், வள்ளியூரில் உள்ள சுரங்கப்பாதை பகுதியை கடந்து, திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிக்க தயாராக வந்தது. பதிவெண் த.நா 74 என் 1746 என்ற பேருந்து, சுரங்கப்பாதையை நோக்கி வந்தது. பேருந்துக்கு முன்பாக லாரி ஒன்று அதனை கடந்து சென்றதாக தெரியவருகிறது. பேருந்து அவ்வழியே செல்லாது என அங்கிருந்த நபர் பேருந்து ஓட்டுனரை எச்சரித்தார்.
எச்சரிக்கையை மீறிச்சென்று பரிதவிக்கவிட்ட ஓட்டுநர்: ஆனால், லாரியை செல்கிறது, அரசு பேருந்துக்கு என்ன? என தெனாவட்டுடன் பேசி தைரியமாக அரசு பேருந்து ஓட்டுநர் வாகனத்தை செலுத்தினார். இறுதியில் பொதுமக்களின் எச்சரிக்கையை மீறி அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சிய செயல்பாட்டினால் பேருந்து சுரங்கப்பாதையின் நடுவே மழை நீருக்குள் சென்று சிக்கிக்கொண்டது. கிட்டத்தட்ட 4 அடி அளவில் தேங்கியிருந்த நீருக்குள் பேருந்து இயக்கப்பட்ட காரணத்தால், முன்பின் செல்ல இயலாமல் நடுவழியில் சிக்கிக்கொண்டது. Vaginal Infection After Tinder Date: பிணத்துடன் உறவு வைத்த சைக்கோவுடன் டேட்டிங் போன பெண்.. டேட்டிங் ஆப்பால் வந்த கண்டம்.. பெண்களே உஷார்..!
பயணிகள் பத்திரமாக மீட்பு: கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த அரசு பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட நிலையில், தீயணைப்பு படையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். பின் பயணிகள் அங்கிருந்து மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசுப்பேருந்து ஓட்டுனரின் அலட்சிய செயல் கண்டனத்தை பெற்று வருகிறது.