Doda Terror Attack: ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. 78 நாட்களில் நடந்த 11வது தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம்.!

கடந்த சில ஆண்டுகளாக குறைந்து இருந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அரங்கேற தொடங்கி இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Doda Terror Attack: ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. 78 நாட்களில் நடந்த 11வது தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம்.!
Doda Attack (Photo Credit: @ANI X)

ஜூலை 16, தோடா (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதமாகவே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது. குல்காம் உட்பட பல்வேறு பகுதிகளில் திடீர் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், நேற்று தோடா (Doda District JK) மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Coimbatore Shocker: கள்ளக்காதலுக்காக கணவரை பலிகொடுத்த மனைவி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சோகம்..! 

3 மாதத்திற்குள் 11 வது தாக்குதல்:

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தோடா மாவட்டத்தின் தெசா (Dessa) பகுதியில் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பதில் என நடந்த தாக்குதல் சம்பவத்தில் 4 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 78 நாட்களில் 11 வது முறையாக பெரிய அளவிலான தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).