Coimbatore Shocker: கள்ளக்காதலுக்காக கணவரை பலிகொடுத்த மனைவி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சோகம்..!
அன்புள்ளம் கொண்ட கணவரை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது. விஷம் வைத்தும் பலியாகாத கணவனை கழுத்தை நெரித்து கொண்ட கேடி மனைவியின் அதிர்ச்சி செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூலை 16, வடவள்ளி (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி (Vadavalli), காலப்பநாயக்கன்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பிரபு (வயது 40). இவர் லேத் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். பிரபுவின் மனைவி லாவண்யா (வயது 33). தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபு, தனது வீட்டில் சடலமாக கழுத்தில் இரத்த காயத்துடன் மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து பிரபுவின் தாயார் (Husband Killed by Wife) வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய நிலையில், காவல்துறையினர் பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் பிரபு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. Minor Girl Missing: சிறுமி மாயமான வழக்கில் 3 சிறுவர்களிடம் விசாரணை.. தேடும் பணிகள் தீவிரம்..!
விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்:
இதனால் பிரபுவின் மனைவியான லாவண்யாவிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது, பிரபுவின் மரணத்தில் இருந்த மர்மம் வெளியாகி, திடுக்கிடும் தகவல் அம்பலமாகி இருக்கிறது. அதாவது, பிரபுவின் மனைவி லாவண்யா, தான் குடியிருந்து வந்த பகுதியிலேயே டிபன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரின் கடைக்கு பைரேகாவடா (வயது 39) என்பவர் வாடிக்கையாளராக சாப்பிட வந்து சென்றுள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். டிபன் கடையில் உணவு சாப்பிட வந்தவர், லாவண்யாவுடன் பழக்கத்தை ஏற்படுத்தி அதனை கள்ளக்காதலாக மலர வைத்துள்ளார். இதனால் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது. Car Swept Away By Flood: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; 4 பேரை காப்பாற்றிய பொதுமக்கள்.. நெகிழவைக்கும் வீடியோ வைரல்..!
விஷம் வைத்தும் உயிர்பிழைத்த கணவனின் கழுத்தை நெரித்துக்கொலை:
இந்த விவகாரம் பிரபுவுக்கு தெரியவரவே, அவர் கள்ளக்காதல் ஜோடியான தனது மனைவி மற்றும் கவுடாவை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜோடி பிரபுவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து, சில நாட்களுக்கு முன் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்து வீடு திரும்பிய பிரபு ஓய்வில் இருந்து வந்துள்ளார். கள்ளக்காதலுக்காக கணவரை பலிகொடுக்க உறுதியாக இருந்த லாவண்யா, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் கள்ளகாதலனுக்கு தகவல் சொல்லியுள்ளார். தகவலை அறிந்ததும் விரைந்து வந்த பைரேகவுடா, பிரபுவின் கழுத்தை துண்டு கொண்டு இறுக்கிக்கொலை செய்து பின் தப்பிச்சென்றார். லாவண்யாவோ கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறி முதலைக்கண்ணீர் வடித்து இருக்கிறார். 3 Dead Bodies in Home: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!
மருமகள் மீது சந்தேகம் இருந்த காரணத்தால், மாமியார் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத்தொடர்ந்து மேற்கூறிய பகீர் சம்பவம் விசாரணையில் அம்பலமானது. விசாரணையைத் தொடர்ந்து காவல்துறையினர் லாவண்யா மற்றும் பைரேகவுடா ஆகியோர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 08:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

