ஜூலை 06, பெரம்பூர் (Chennai News): சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 51), தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி (Bahujan Samaj Party President Armstrong Killed) கட்சியின் தலைவராக செயல்படுகிறார். இவர் செம்பியன், வேணுகோபால் தெருவில் உள்ள தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதனால் நேற்று இரவு ஆம்ஸ்ட்ராங் கட்டுமான பணிகளை நேரில் பார்க்க அயனாவரத்தில் இருந்து வேணுகோபால் தெருவுக்கு சென்றுள்ளார். அங்கு தனது ஆதரவாளர்கள் மற்றும் உடன் இருக்கும் நம்பிக்கைக்குரியவர் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
டெலிவரி ஊழியர்கள் போல நுழைந்து கொடூர கொலை:
அச்சமயம் அங்கு ஆதரவாளர்கள் போல இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த 6 பேர் கும்பல், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை அவரின் ஆதரவாளர்கள் கண்முன் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்தது. நேற்று இரவு 06:55 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், கொலை சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல், அங்கிருந்து விரைவாக தப்பிச்சென்றது.
கண்ணீருடன் ஆதரவாளர்கள் போராட்டம்:
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட ஆதரவாளர்கள், கிரீன்ஸ்வேஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு ஒருசில நிமிடங்களில் ஆம்ஸ்ட்ராங் பரிதாபமாக உயிரிழந்தார். மறைந்த ஆம்ஸ்ட்ராங் மீது அங்குள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதால், முன்விரோதத்தில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மறைவை அறிந்த ஆதரவாளர்கள், பல இடங்களில் சாலைகளில் திரண்டு கண்ணீருடன் போராட்டம்-மறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர். Coimbatore Shocker: குழந்தையை சேலையில் ஒருசேர முடிந்து தாய் தற்கொலை; கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சோகம்..!
பழிக்கு பழியாக நடந்த பயங்கரம்:
இதனால் பெரம்பூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து விசாரிக்க உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் கும்பல் அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் சரண் அடைந்தது. இவர்களிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், ஆற்காடு பகுதியை சேர்ந்த பிரபல ரௌடி ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங்குக்கு தொடர்பு இருப்பதாக சுரேஷின் ஆதரவாளர்கள் சந்தேகித்துள்ளனர்.
செல்வாக்கு மிக்க நபரான ஆம்ஸ்ட்ராங்:
இந்த கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழிவாங்க எண்ணி, ஆம்ஸ்ட்ராங் கூலிப்படை கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முக்கிய புலியாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு என்பவர் செயல்பட்டு இருக்கிறார். கைதான 8 பேர் கும்பலில் அவரும் ஒரு நபராக சரணடைந்து இருக்கிறார். இதனால் விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறைந்த ஆம்ஸ்ட்ராங்-க்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டப்பகுதிகளில் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Air Pollution Deaths: சென்னை, மும்பை நகரங்களில் காற்று மாசு மரணங்கள் அதிகரிப்பு; ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் பலி.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
மாயாவதியின் கண்டனம்:
தனது கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டதை அறிந்த பகுஜன் சமாஜவாதி கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தனது இரங்கல் மற்றும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அவர் இன்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகமும் வருகை தருகிறார். தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1000 காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர்:
மறைந்த ஆம்ஸ்ட்ராங் இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பலரின் வாழ்க்கைக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதேபோல, அம்பேத்காரின் கொள்கை மீது தீவிர பற்றுக்கொண்ட ஆம்ஸ்ட்ராங்கிடம் இருந்து தான் பா. ரஞ்சித் தனது புரட்சிகர பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் அம்பேத்காரின் பொன்மொழிகளை திரைப்படங்களில் இடம்பெறச் செய்ய ஆம்ஸ்ட்ராங் உறுதுணையாக, உத்வேகமாக இருந்துள்ளார். புரட்சி பாரதம் கட்சியின் வாயிலாக அரசியலுக்குள் நுழைந்த ஆம்ஸ்ட்ராங், 2006 க்கு பின் மாயாவதியுடன் இணைந்து பயணித்து வந்துள்ளார். தன்னிடம் உதவி என வரும் நபர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்தல், கல்வி வழங்குதல் என பல நன்மைகளை ஆம்ஸ்ட்ராங் செய்துள்ளார். Woman Doctor Dies By Suicide: கணவன்-மனைவி குடும்ப தகராறு; பெண் மருத்துவர் தற்கொலை..!
சமத்துவ தலைவராக ஆம்ஸ்ட்ராங்:
பல சட்டக்கல்லூரி மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்த ஆம்ஸ்ட்ராங் பிற கட்சி தலைவர்களான பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பலரின் மீது பற்றுகொண்டவர் ஆவார். பல விழா மேடைகளில் பாமக நிறுவனர் குறித்து பாராட்டியும் பேசி இருக்கிறார். ஆனால், இவரின் மீதான குற்றவழக்குகள் காரணமாக, அவரின் மரணம் நடந்துள்ளது என தகவல்களும் வெளியாகி வருகின்றன. வடசென்னையின் முக்கியப்புள்ளிகளில் ஒருவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கூறும் ஜெய்பீம் வாசகமே, இன்று திரைப்படங்களில் ஜெய்பீமாக ஒலித்து இருக்கிறது. இவர் தன்னை நம்பியவர்களுக்கு நன்மை செய்ததால் அவர்களால் வரவேற்கப்படுகிறார், மற்றொருபுறம் தவிர்க்கப்படுகிறார். இவரிடம் பயணித்தவர்களால் ஆம்ஸ்ட்ராங் சமத்துவ தலைவராகவும் கவனிக்கப்பட்டு போற்றப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங்கின் மீது கொலை உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் முந்தைய காலங்களில் இருந்தபோதிலும், அதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி அடைந்தார். இவரின் மீது தற்போது சர்ச்சைக்குரிய வழக்குகள் இல்லை என்று கூறப்பட்டாலும், ரௌடி கூட்டங்களுக்குள் நடந்த பிரச்சனை இறுதியில் அவரின் உயிரை பறிக்க காரணமாக அமைந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
The gruesome killing of Mr. K. Armstrong, Tamil Nadu state Bahujan Samaj Party (BSP) president, outside his Chennai house is highly deplorable and condemnable. An advocate by profession, he was known as a strong Dalit voice in the state. The state Govt. must punish the guilty.
— Mayawati (@Mayawati) July 5, 2024