ஜனவரி 05, கண்ணூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் (Kannur) பகுதியில் வசித்து வருபவர் அலன் அலெக்ஸ் (வயது 32). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள கோழிக்கோடு, காக்கூர் பகுதியில் பள்ளி மாணவி வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் வாயிலாக பேசி வந்ததாக தெரியவருகிறது. இதனிடையே, மருத்துவர் மாணவிக்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளார். இந்த விஷயம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் அலெக்ஸை கையும்-களவுமாக பிடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக அலெக்ஸை கோழிக்கோட்டுக்கு வரவழைத்துள்ளனர். Viral Video: புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வீடியோ வைரலானதை அடுத்து டிஎஸ்பி கைது..!
நேரில் வந்த மருத்துவருக்கு தர்ம அடி:
உல்லாச ஆசையில் காரில் வந்த மருத்துவர் அலெக்ஸ், மாணவியை காரில் ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது, அங்கு தயார் நிலையில் மறைந்து இருந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் அலெக்ஸை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின் கோழிக்கோடு வெள்ளயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மருத்துவர் அலெக்ஸை கைது செய்தனர். மேலும், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அலெக்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.