பிப்ரவரி 11, மதுரா (Uttar Pradesh News): இன்று காலை உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா (Mathura) பகுதியில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் (Yamuna Expressway) காரும் தனியார் பேருந்தும் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த இரு வாகனங்கள் மோதியதைத் தொடர்ந்து பற்றி எரியத் தொடங்கியது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மதுரா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Xiaomi 14 Series: சியோமி 14 சீரிஸ் போன்களின் குளோபல் வேரியண்ட்.. எப்போது வெளியாகும்?.!
இந்த விபத்தில் (Accident) பேருந்தில் பயணித்த 55 பயணிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த நபர்களில் ஒருவர் ஃபிரோசாபாத் பகுதியின் ஷிகோஹாபாத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மற்ற நபர்களை பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Horrific #accident on #YamunaExpressway. The tire of the Volvo bus going from Agra to Noida got punctured and the car coming from behind rammed into it. The bus & car caught fire. reports of 5 people in car burnt alive#Mathura #viralvideo #RoadAccident #Biharpoltics pic.twitter.com/x51NFtqqvg
— Anushka Singh Rawat (@AnuRawat01) February 12, 2024