பிப்ரவரி 12, புதுடெல்லி (New Delhi): சியோமி 14 சீரிஸ் (Xiaomi 14 Series) போன்களின் குளோபல் வேரியண்ட் மொபைலிற்கு ஈஎம்விகோ (EMVCo) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. இது ஹைபர்ஓஎஸ் (HyperOS) சப்போர்ட்டுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. Vetri Duraisamy Body Found In Satluj River: 8 நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணி.. வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..!
சிறப்பம்சங்கள்: சியோமி 14 போனில் 6.36 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. மேலும் அதனுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது. இது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி என்று 3 வேரியண்ட் கொண்டிருக்கிறது. அதில் 50 எம்பி மெயின் லைட் ப்யூஷன் 900 சென்சார் (Light Fusion 900 sensor) கேமரா வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,810 ஆகும். இது சீனாவில் வெளியாகி விட்டது. மேலும் இந்தியாவில் பிப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிமுகம் இருக்க வாய்ப்புள்ளது.