NEET Student Raped: நீட் பயிற்சிக்கு வந்த மாணவி ஆசிரியர்களால் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
வேதியியல், உயிரியல் வகுப்பு ஆசிரியர்கள், நீட் தேர்வு பயில வந்த மாணவியை பலாத்காரம் செய்து மிரட்டிய கொடுமை அம்பலமாகி அதிர்ச்சியை தந்துள்ளது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 10, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் (Kanpur Neet Student Rape) மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கான்பூர் நகரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த 2022ம் ஆண்டு சேர்ந்து இருக்கிறார். இவர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தனியாக தனியிருந்ததாகவும் தெரிய வருகிறது. இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் மாணவியை உயிரியல் ஆசிரியர் சாஹில் சித்திகி (வயது 32) என்பவர், தனது வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது, அதில் நீ வந்து கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பலாத்காரம் & மிரட்டல்:
இதனை ஏற்றுக்கொண்டு மாணவி ஆசிரியரின் வீட்டிற்குச் சென்ற நிலையில், அங்கு அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கத்தில் இருந்து தெளிந்த மாணவி தனக்கு நடந்ததை உணர, அவரை மிரட்டி, இதுகுறித்து வெளியே கூறினால் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் மாணவியும் செய்வதறியாது திகைத்து வீட்டிற்கு வந்துள்ளார். Couple Arrested: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
உயிரியல் ஆசிரியரும் அத்துமீறல்:
பின் மாணவியை சுமார் 1 மாத காலம் தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர், வேதியியல் ஆசிரியரான விகாஸ் போர்வால் (வயது 39) என்பவரையும் அத்துமீற அனுமதி செய்துள்ளார். பின் இருவரும் சேர்ந்து சிறுமியை அவ்வப்போது மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனிடையே, நீட் பயிற்சி மையத்தின் சிசிடிவி கேமிரா இருக்கும் இடத்தில், சித்திக் வேறொரு மாணவியிடம் அநாகரீகமாக நடக்க முற்பட்டார். இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இருவர் கைது:
ஆசிரியர் சித்திக்-க்கு எதிராக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் அளித்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட சிறுமி, ஆசிரியர்கள் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் சிறுமிக்கு நடந்த அநீதி அம்பலமானது உறுதியாகவே, தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Nov 10, 2024 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

