நவம்பர் 09, பெங்களூரு (Karnataka News): சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சாகர் குருங் (வயது 37) தனது மனைவி ஊர்மிளா குமாரியுடன் (வயது 38) பெங்களூருவில் (Bengaluru) உள்ள சதாசிவ நகரில் வசித்து வருகிறார். கடந்த வாரம் ஊர்மிளா குமாரி தனது வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தை வீடியோ எடுத்து முகநூல் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவில் 20-க்கும் மேற்பட்ட செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடியும் (Ganja Plants) இருந்துள்ளது. Train Derailed: பயணிகள் விரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; நல்வாய்ப்பாக காத்திருந்த அதிஷ்டம்.!
இதுகுறித்து, சதாசிவ நகர் காவல்நிலையத்துக்கு சிலர் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இவர்கள் வருவதைக் கண்ட ஊர்மிளா குமாரி கஞ்சா செடிகளை பிடுங்கி, குப்பைக் கூடையில் போட்டார். இதைக்கண்டறிந்த காவல்துறையினர் அங்கிருந்த 54 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், சாகர் குருங் மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி ஆகிய இருவரையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் கஞ்சா பழக்கம் இல்லை எனவும், வாஸ்துவுக்காக கஞ்சா செடியை வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.