Woman Jumps Off 3rd Floor: கணவருடன் ஏற்பட்ட தகராறு.. மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 05, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தோரின் லசுடியா காவல் நிலையப் பகுதியில் உள்ள டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராகுல் - அங்கூரி பாய். இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது, இவர்கள் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராகுலுக்கு அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அங்கூரி பாய், வீட்டின் 3வது தளத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். CPR Treatment For Teenager: மயங்கி விழுந்த நபர்; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டு..!
குறிப்பு: தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல, தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.
Indore: तीसरी मंजिल से कूदकर महिला ने की आत्महत्या, पति से विवाद के बाद दी जान, देखें Video#Suicide #Crime #Indore #MadhyaPradesh #MPNews | @CP_INDORE @MPPoliceDeptt pic.twitter.com/f580JUqe3o— INH 24X7 (@inhnewsindia) August 5, 2024
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

