CPR Treatment For Man (Photo Credit: @TeluguScribe X)

ஆகஸ்ட் 05, முழுகு (Telangana News): தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் உள்ள பாஸ்ரா பகுதியில் சுவரில் இருந்து தவறி விழுந்த நபருக்கு, இரண்டு காவல்துறையினர் சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து காப்பாற்றினர். செய்தனர். லட்சுமணன் என்ற நபர் சுவரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் சுயநினைவை இழந்ததால் அவரை அப்பகுதியினர் இறந்துவிட்டார் எனக் கருதி அவர் அருகில் கூட செல்லவில்லை. அப்போது அங்கிருந்த மது, மதுகர் என்ற இரு காவலர்கள் அவரது உயிரை காப்பாற்ற முயன்றனர். Young Woman Sexual Harassment: நடைபயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சிசிடிவி காட்சிகள் வைரல்..!

அவர்கள் இருவரும் இணைந்து சிபிஆர் சிகிச்சை அளித்து வந்தனர். ஒருவர் அவரது நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டிருந்தார். மற்றொருவர் அவரது வாய் வழியாக மூச்சு காற்றை செலுத்தினார். இதன் பிறகு அவர் சிறிது நேரத்தில் சுயநினைவு பெற்றார். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சரியான நேரத்தில் சிபிஆர் சிகிச்சை அளித்து வாலிபரின் உயிரைக் காப்பாற்றிய காவலர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.