YSRC Leader Found Dead: தேர்தல் பந்தயம்.. ஒய்.எஸ்.ஆர்.சி தலைவர் ஜக்கவரபு வேணுகோபால் கொலை.. ஆந்திராவில் பரபரப்பு..!

ஒய்.எஸ்.ஆர்.சி தலைவர் ஜக்கவரபு வேணுகோபால் ரெட்டி நுசிவீடு மண்டலத்தில் உள்ள துர்புடிகவள்ளி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

YSRC Leader Found Dead: தேர்தல் பந்தயம்.. ஒய்.எஸ்.ஆர்.சி தலைவர் ஜக்கவரபு வேணுகோபால் கொலை.. ஆந்திராவில் பரபரப்பு..!
Jaggavarapu Venugopal Reddy (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 10, காக்கிநாடா (Andhra Pradesh News): ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

ஆந்திர மாநிலத்திலுள்ள காக்கிநாடா மாவட்டத்தின் நுசிவீடு தொகுதியில் தேர்தலில் பலர் அதிக அளவில் பந்தயம் கட்டியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் வேணுகோபால ரெட்டி (YSRC leader Jaggavarapu Venugopal Reddy) என்பவரிடம் பந்தயத்தில் ஈடுபட்ட சுமார் ₹10 கோடி பணம் இருந்துள்ளது. ஒய்எஸ்ஆர்சி வெற்றிக்காக வேணுகோபால ரெட்டி இந்தப் பணத்தை பந்தயம் கட்டி உள்ளார் . ஆனால் ஒய்எஸ்ஆர்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நுசிவீடு மண்டலத்தில் உள்ள துர்புடிகவள்ளி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். Perambalur Shocker: ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் பரிதாப பலி; சாகப்போவதாக கத்திக்கொண்டு துயரம்..!

வேணுகோபால ரெட்டி அருகில் பூச்சி மருந்து பாட்டிலுடன் இறந்து கிடந்ததை தொழிலாளர்கள் கண்டனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ரெட்டியிடம் இருந்து அந்தத் தொகையை பறிக்க திட்டமிட்டு, சிலர் கோழிப் பண்ணையில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியதாகத் கூறப்படுகிறது. மேலும் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).