ஜூன் 10, பெரம்பலூர் (Perambalur News): பெரம்பலூர் நகரில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து ஒன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் நோக்கி பயணம் செய்தது. பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள அடைக்கம்பட்டி கிராமம் அருகே சென்றுள்ளது. அச்சமயம் போனில் ஆத்திரத்துடன் சண்டையிட்டவாறு பேசியபடி பயணம் செய்த இளைஞர், "நான் சாகப்போகிறேன்" என்று கூச்சலிட்டவாறு, ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தார்.
சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்:
இந்த சம்பவத்தை யாருமே எதிர்பார்க்காத நிலையில், அதிர்ந்துபோன பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி இருக்கிறார். பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்று பார்த்தபோது, பேருந்தில் இருந்து குதித்த இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. நிகழ்விடத்திலேயே இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. Aircraft Message as Release Imran Khan: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் கவனத்தை ஈர்த்த இம்ரான் கான் ஆதரவாளர்கள்; நடுவானில் உயரப்பறந்த கோரிக்கை.!
துறையூரை சேர்ந்த இளைஞர்:
தகவல் அறிந்து வந்த பாடாலூர் காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் (Perambalur Govt Hospital) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இளைஞர் யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், இளைஞர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், தெற்குத்தெருவில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் வினோத் (வயது 21) என்பது தெரியவந்தது.
காதல் பிரச்சனையில் தற்கொலையா?
இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பூக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று பெரம்பலூர் வந்தவர், வீட்டிற்கு செல்ல இரவில் அரசுப்பேருந்தில் பயணம் செய்தபோது துயரம் நடந்து உறுதியானது. இவர் பெரம்பலூர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாகவும் தெரியவரும் நிலையில், பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் வினோத் தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.