Bengaluru Tragedy: புகைப்படம் எடுக்க மறுத்த பெற்றோர்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!

போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவியை பெற்றோர்கள் கண்டித்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Tragedy: புகைப்படம் எடுக்க மறுத்த பெற்றோர்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!
Suicide File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 04, பெங்களூர் (Bengaluru): கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள சுதாமா மாநகரில் வசித்து வருபவர் வர்ஷினி. இவருக்கு வயது 21. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வருகின்றார். மேலும் போட்டோகிராபி படிப்பும் படித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போட்டோ ஷூட்டில் இவருக்கு மிகவும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே புத்தாண்டுக்காக மாலில் இருந்து போட்டோ சூட் எடுக்க எண்ணி உள்ளார். ஆனால் அவரின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். Actress Amala Paul Announces Pregnancy: கர்ப்பத்தை அறிவித்த அமலா பால்… ரசிகர்கள் மகிழ்ச்சி..!

இதனால் மனமுடைந்த வர்ஷினி தனது அறைக்குள் சென்று விட்டு கதவை பூட்டிக் கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து அவரின் பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் வர்ஷினி திறக்கவே இல்லை. இதனால் பயந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு வர்ஷினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jan 04, 2024 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).