Rajinikanth Invited To Ram Temple Inauguration: ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு..!

அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Invited To Ram Temple (Photo Credit: @ANI X)

ஜனவரி 02, சென்னை (Chennai): உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Chicken Momos Recipe: ருசியான சிக்கன் மோமோஸ்... ஈஸியா செய்வது எப்படி?.!

அவர்க்கு அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில், நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஆர்எஸ்எஸ் தென்பாரத அமைப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்டோரும், நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கினர். அதுமட்டுமின்றி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தி முழுவதும் காவல்துறையினர், தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement