Venkateswara Swamy Temple Stampede (Photo Credit : @ndtv X)

நவம்பர் 01, ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh News): கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சோகம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம், காசிபக்கா வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் பலரும் பெருமாளை பார்ப்பதற்காக முண்டியடித்து முன்னே சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்:

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்த நிலையில், அவர்களின் மீது பலரும் ஏறி மிதித்து முன் செல்ல முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே மூச்சு திணறி உள்காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். LPG Cylinder Price: சிலிண்டர் விலை குறைவு.. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தித்திப்பு செய்தி.!

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை:

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான பதற வைக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கோவில் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த பதறவைக்கும் வீடியோ காட்சிகள் (Venkateswara Swamy Temple Stampede):