அக்டோபர் 26, திருச்செந்தூர் (Festival News): தமிழ்க்கடவுள் முருகனை கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று கந்த சஷ்டி. ஐப்பசி மாதத்தின் சஷ்டி ஆறு நாட்கள் திருவிழா போல கொண்டாடப்படும். இறைவன் முருகப்பெருமான் திருச்செந்தூரில் அசுரனை வதம் செய்ததன் நினைவாக கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு, சூரஸம்ஹாரத்துடன் நிறைவு பெறும். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாத முருக பக்தர்கள், சூரஸம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பது மனதில் நினைத்ததை நிறைவேற்றித்தரும் என்பது முன்னோர்கள் வாக்கு. Health Tips: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? காய்ச்சல் விட்டு ஓடணுமா? டிப்ஸ் உள்ளே.!
கந்த சஷ்டி சூரஸம்ஹார நாள் விரதம் (Kanda Sashti Surasamharam Viratam):
சூரஸம்ஹார நாளில் அதிகாலையில் எழுந்து முதலில் நீராட வேண்டும். பின் சுத்தமான ஆடை உடுத்தி, மனம் மற்றும் உடல் தூய்மையுடன் முருகனை பிரார்த்திக்க வேண்டும். முருகனை நினைத்து ஆராதனை செய்வது, கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. மௌன விரதம் இருப்பவர்கள் மனதிலும் தூய்மையான எண்ணத்தை நிலைநிறுத்த வேண்டும். அதனை விரதத்தோடு முடித்துக்கொள்ளாமல், தொடர வேண்டும் என்பதே இந்த விரதத்தின் முக்கியத்துவம் ஆகும். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும், முருகனை வணங்கி ணெய் விளக்கேற்றி வழிபாடு செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். இதனால் குருவின் பார்வையுடன் முருகனின் அருளும் கிடைக்கும். முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
முருகனின் அருள் கிடைக்கட்டும்:
ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் திருக்கோவில் -
அச்சிறுபாக்கம் .
பெரும்பேர் கண்டிகை சிவ சுப்பிரமணியர்:
மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :
திருச்செந்தூருக்கு இணையாக சத்ரு சம்ஹாரத் தலம்! pic.twitter.com/7ouUzySryW
— M.SivaRajan (@MSivaRajan7) October 25, 2025