Anjali Chakra And Sufi Malik Break Up: பிரிந்த இன்னொரு பங்காளி நாட்டு ஜோடி.. அதுவு‌ம் இந்த முறை ஓரின சேர்க்கை ஜோடி..!

ஐந்து வருடங்களாக காதலித்து வந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக் இருவரும் பிரேக்கப் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Anjali Chakra And Sufi Malik Break Up: பிரிந்த இன்னொரு பங்காளி நாட்டு ஜோடி.. அதுவு‌ம் இந்த முறை ஓரின சேர்க்கை ஜோடி..!
Anjali Chakra and Sufi Malik (Photo Credit: Instagram)

மார்ச் 26, புதுடெல்லி (New Delhi): லண்டனைச் சேர்ந்த பிரபல சமூகவலைதள இன்ஃபுளூயன்சர்கள் அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக். தன்பாலின ஈர்ப்பாளர்களான இவர்கள் இருவரும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்தனர். அடுத்த சில வாரங்களில் இவர்களது திருமணம் நடைபெற இருந்த நிலையில், தங்கள் உறவில் இருந்து தாங்கள் பிரிந்து விட்டதாக இருவரும் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் அறிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து சூஃபி தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘எங்களது திருமணத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மன்னிக்க முடியாத குற்றத்தையும் துரோகத்தையும் அஞ்சலிக்கு நான் செய்து விட்டேன். இது அவரை கடுமையாக பாதித்துள்ளது. எனது குடும்பத்தையும் நண்பர்களையும் கூட வருத்தப்பட வைத்து விட்டேன். அதனால், இது பிரிய வேண்டிய நேரம். எங்களைப் புரிந்து கொண்டு எங்களது பிரைவசிக்கு மதிப்புக் கொடுங்கள்’ எனக் கூறியுள்ளார். Cow Dung Holi: மாட்டுச்சாணத்தை மார்கோ சோப் போன்று தேய்த்த கவுஷல் கிஷோர் மிஸ்ரா.. வைரலாகும் வீடியோ..!

அஞ்சலியும் இது குறித்து, ‘கடந்த ஐந்து வருடங்களாக நானும் சூஃபியும் அழகான காதல் தருணங்களில் திளைத்து வந்தோம். இத்தனை நாட்கள் நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால், சூஃபி செய்த துரோகத்தால் இப்போது எங்கள் திருமணத்தை நிறுத்த இருக்கிறோம். நாங்கள் இருவரும் பிரியவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக சூஃபி மீது நீங்கள் எந்தவிதமான நெகட்டிவிட்டியையும் காண்பிக்க வேண்டாம். அவளுடன் இருந்த காலத்தை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைத்து பார்ப்பேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sufi Malik (@sufi.sun)

(The above story first appeared on LatestLY on Mar 26, 2024 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).