மார்ச் 26, உத்தர பிரதேசம் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள BHU-வின் முன்னாள் டீனும் பேராசிரியருமான கவுஷல் கிஷோர் மிஸ்ராவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், மாட்டுச் சாணத்தில் அவர் ஹோலி விளையாடுவதைக் காணலாம். பேராசிரியர் கௌஷல் கிஷோர் பசுவின் சாணத்தை உருட்டி தன் உடலில் தேய்த்துக் கொண்டிருக்கிறார். இதன் போது அவர் கூறுகையில், "மாட்டு சாணத்தின் ஹோலி அற்புதமானது. முன்னதாக, இந்தியாவின் கிராமங்களில் ஹோலி இவ்வாறு விளையாடப்பட்டது. பசுவின் சாணத்தில் ஹோலி விளையாடுவது உடலை சுத்தப்படுத்துகிறது" என்கிறார். தற்போது இந்த வீடியோ குறித்து சமூக வலைதளவாசிகள் பல்வேறு நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Holi Car Care Tips: ஹோலியால் கண்டமான காரை பங்கம் செய்வது எப்படி?. விபரம் இதோ..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)