Sexual Assault Case: மனைவியை பாலியல் அடிமையாக்கி சித்திரவதை.. இரண்டு சிறுமிகளை சீரழித்த பாவி..!

நான்கு வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இயற்கைக்கு மாறான பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sexual Assault Case: மனைவியை பாலியல் அடிமையாக்கி சித்திரவதை.. இரண்டு சிறுமிகளை சீரழித்த பாவி..!
Arrest | Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் (Sexual Abuse) கூறப்படுகிறது. பள்ளியின் கழிவறையில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து இரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பெற்றோரும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரும் பத்லாப்பூர் கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.

பள்ளி பணியாளர்கள் கைது: காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பத்லாபூர் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் பள்ளி பணியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ரயில்களை மறித்து (Badlapur station) போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த மாதம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. Husband Kills Wife: வரதட்சணை கொடுமையால் பெண் கொலை.. கொடூர சம்பவம் செய்த கணவன் தலைமறைவு..!

இயற்கைக்கு மாறான பாலியல்: அதன் பிறகு அதே பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டு வந்த அக்ஷய் ஷிண்டே (வயது 23) எனும் நபர் தான் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்து அவனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்ட அக்ஷய் ஷிண்டேவின் இரண்டாவது மனைவியான 21 வயதுடைய பெண் ஒருவர் போயசர் காவல்துறையை அணுகி அவர் மீது வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பெண் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அக்ஷய் ஷிண்டேவை திருமணம் செய்து கொண்டு, அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் பத்லாபூரில் வசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அவர் தன்னுடன் "இயற்கைக்கு மாறான உடலுறவு" கொள்ளுமாறு வற்புறுத்தியதனால், அந்த பெண் அவரை விட்டு சென்றதாக அவர் காவல்துறையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) பிரிவின் கீழ் போயசூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).