Husband Kills Wife: வரதட்சணை கொடுமையால் பெண் கொலை.. கொடூர சம்பவம் செய்த கணவன் தலைமறைவு..!
உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், தனது மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 16, அம்ரோஹா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அம்ரோஹாவில் (Amroha) ரூ. 3 லட்சம் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி பைக் வரதட்சணையாக தராததால், மனைவியை அவரது கணவர் அடித்துக்கொலை செய்துள்ளார். பைகேடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது, வரதட்சணை (Dowry) கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக, அடிக்கடி தன்னைத் துன்புறுத்திய வருவதாக மீனா தனது தந்தையிடம் கூறியுள்ளார். Stray Dogs Attack Child: பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே மீனா சோஹர்காவில் உள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்தார். சுந்தர் ஒவ்வொரு நாளும் தனது மனைவியை பார்க்க சென்று வருவார். அப்போது, அவர் நேற்றைய தினம் (செப்டம்பர் 15) இரவு அவர்களைச் சந்தித்து, மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர், வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். வரதட்சணை கொடுக்க முடியாததால், அவரை கட்டையால் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை (Murder) செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், அந்த பெண்ணின் குடும்பத்தினர், குற்றவாளியை கைது செய்யக்கோரி காவல்நிலையத்திற்கு வந்து சுந்தர், அவரது தந்தை, அவரது தாய், சகோதரி மற்றும் நான்கு பேர் மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 16, 2024 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

