செப்டம்பர் 16, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் உள்ள சகன் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி ஆண் குழந்தை ஒன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த ஏழு முதல் எட்டு தெரு நாய்கள் அந்த குழந்தையை பகிரங்கமாக தாக்க ஆரம்பித்தன. இதனால் அந்த சிறுவன் அலற ஆரம்பித்தான். குழந்தையின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற ஓடி வந்தனர். அங்குள்ள தெருநாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர்.
இச்சம்பவத்தில் சிறுவனுக்கு பலத்த ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Car-Bike Accident: வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து; 2 பெண்கள் பலியான சோகம்..!
நம் குழந்தை வீட்டின் வாசலில் தானே விளையாடுகிறார், கதவு திறந்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என பல பெற்றோர்கள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். இவ்வாறான செயல்கள் பெரும் சோகத்தை தரும். ஆகவே பெற்றோர்களே உஷாராக இருங்கள்.
Disturbing CCTV footage from Pune's Chakan. Child attacked by 8 stray dogs while playing outside his home. Saved by relatives & neighbors
Dog bite cases surged from 21.8 lakh to 27.5 lakh between 2022-2023, with Maharashtra alone reporting 4.35 lakh cases#Pune #StrayDogMenace pic.twitter.com/QCwMTEX8DP
— Nabila Jamal (@nabilajamal_) September 15, 2024