நவம்பர் 04, அல்மோரா (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் இருந்து குமாவோனுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மர்சுலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயணிகள் உதவிக்காக அலறிய நிலையில், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். Woman Falls Onto Tracks: ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ.!
உள்ளூர் காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயங்கர விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து:
#Uttarakhand: Tragic Incident, at least 23 people died and nearly 20 were injured after a bus reportedly carrying more than 45 passengers fell into a gorge near #Kupi village in #Almora district on Monday. #BusAccident #AlmoraBusAccident #RoadSafety #UttarakhandBusAccident pic.twitter.com/FA1QwT90mu
— Hyderabad Netizens News (@HYDNetizensNews) November 4, 2024