Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து.. இருவர் பலியான சோகம்..!

கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்தப்படி காரை இயக்கியதால், கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து.. இருவர் பலியான சோகம்..!

செப்டம்பர் 24, கோட்டயம் (Kerala News): கேரள மாநிலம், கோட்டயத்தில் (Kottayam) கார் ஆற்றில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு 8.30 மணியளவில் நடந்துள்ளது. காருக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்தபோது கார் தண்ணீரில் மூழ்கியது. அப்பகுதியினர், உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களின் உதவியுடன் இரு சடலங்களையும் காரையும் மீட்டனர்.  Boy Killed In Bus Collision: பேருந்து மோதி சிறுவன் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இருவரும், மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கூகுள் மேப்பை பார்த்தப்படி காரை இயக்கியதால், பாலத்தின் மீது ஏறுவதற்கு பதிலாக, ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).