மே 26, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவராக இருந்த யாசின் மாலிக் (Yasin Malik), அப்பகுதியில் ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்து பயங்கரவாதத்தை வளர்த்ததால் மத்திய அரசால் பயங்கரவாதிகளால் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2002ம் ஆண்டு யாசின் மாலிக் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க நிதிஉதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டார். Bali Hindu Temple: இந்து கோவிலுக்குள் நிர்வாணமாக நடந்து சென்ற வெளிநாட்டு இளம்பெண்; அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!
அவரின் மீது தேசிய புலனாய்வு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து இருந்தது. இந்த நிலையில், யாசின் மாலிக்-க்கு மரண தண்டனை விதிக்க கூறி தேசிய புலனாய்வு முகமை மனுதாக்கல் செய்துள்ளது.