Bali Temple Germany Women Issue (Visual From Video)

ஏப்ரல் 26, பாலி (Indonesia News): சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இந்தோனேஷியா நாட்டில் பல்வேறு வகையான கலாச்சாரங்கள், இன்றளவும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு இந்திய அரசர்களின் ஆட்சி முதல் முகலாயர்கள் வரை பலரின் ஆட்சி நடந்தாலும், தொன்மை என்பது பாதுகாக்கப்பட்டு வருகிறது. Copper Pot Water: “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” – பழமொழியை மெய்ப்பிக்கும் செம்பு பானை நீர்.. நாளொன்றுக்கு இவ்வுளவு தான் குடிக்கலாம்.!

இந்தோனேஷியாவில் உள்ள பல அழகை சுற்றிப்பார்க்க உலகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள். இந்த நிலையில், இன்று ஜெர்மனிய பெண்மணியால் சர்ச்சைக்குரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

Bali Temple Germany Women Issue (Photo Credit: Twitter)

அங்குள்ள பாலி நகரில் உள்ள இந்து கோவிலுக்கு வருகை தந்திருந்த ஜெர்மனிய நாட்டு சுற்றுலா பயணி, தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் நிர்வாணமாக கோவில் பகுதியில் நடந்து ரகளை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.