ஜூன் 08, பாட்னா (Bihar News): பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் நோக்கி பயணிகள் ரயில் சென்றது. இந்த ரயிலில் வியாழன் மாலை 5.24 மணியளவில், கியூல் ரயில் நிலையம் அருகே செல்லும்போது, ஒரு பெட்டியில் இருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியது. இதனால், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சற்று நேரத்தில் அந்த ரயில் பெட்டிகளில் தீ பரவியது. Santhanam Vs Soori: சந்தானமா? சூரியா? திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன..?
இதனையடுத்து, மற்ற பெட்டிகளிலும் தீ பரவாமல் தடுக்க உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த ரயில் தீ விபத்தில் (Train Fire Accident) எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், டானாபூர் கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தெரிவித்துள்ளார்.
மேலும், இரவு 8 மணியளவில் ஜசிதிக்கு புறப்படுவதற்கு முன்னதாகவே பாதிக்கப்பட்ட ரயில் பெட்டிகளை ரயிலில் இருந்து நீக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். தற்போது, அந்த ரயிலை பயணிகள் அனைவரும் தள்ளிச் செல்லும் காட்சியை கீழே காணலாம்.
At Kiul Junction station, passengers pushed the train and made it run on the tracks
Bihar🫡🔥
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 8, 2024