![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1717842935Santhanam%2520Vs%2520Soori-380x214.jpg)
ஜூன் 08, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கும் சந்தானம் மற்றும் சூரி பற்றிய மீம்ஸ்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் பரவி வருகின்றது. சந்தானம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து, சினிமாவிற்கு நுழைந்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றார். வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்கள் இருந்த காலத்திலேயே தனக்கென ஒரு காமெடி பாணியை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் மதிப்பை பெற்றார். பின்னர், கடந்த சில ஆண்டுகளாக காமெடி (Comedy) ரோலை தவிர்த்து, நடிகராகவே நடித்து வருகிறார். மறுபுறம் சூரி சின்ன சின்ன காதபாத்திரங்களில் நடித்து, பிறகு வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். அந்த படத்தின் மூலம் 'பரோட்டா சூரி' என அனைவராலும் அறியப்பட்டார். 3 Children Drowned: ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி; 2 பேர் உயிருடன் மீட்பு..!
இவர்கள் இருவருமே கஷ்டபட்டு தான் இந்த நிலையை அவர்கள் இன்று அடைந்து இருக்கிறார்கள். இவர்கள், தங்களது சினிமா பயணத்தில் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது ஒரு நல்ல இடத்தை பெற்றிருக்கிறார்கள். சந்தானம் கதாநாயகனாக (Hero) அறிமுகமான பிறகு அவருடைய படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கும் வகையில் உள்ளது.
விடுதலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான சூரி, தனது சிறப்பான நடிப்பால் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் பக்காவாக பொருந்துகிறார். தற்போது, சில நாட்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியான கருடன் படம் மூலம் சினிமா ரசிகர்கள் சூரியை முழு நேர கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர். இவர்கள் இருவரும் காமெடியனாக தங்களது சினிமா பயணத்தை தொடங்கி, தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர். எனவே, இவர்கள் இருவரின் படங்களையும் ஆதரவு அளித்து ரசிக்க வேண்டும் என்பதே திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.