நர்சிங் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. போலீஸ் விசாரணை..!
உத்தர பிரதேசத்தில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை (Nursing Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 19, மொராதாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பாக்பரா பகுதியில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சம்பல் மாவட்டத்தில் உள்ள அஸ்மோலியாவை சேர்ந்த தீக்ஷா பால் என்ற மாணவி, இங்கு நர்சிங் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 18) கல்லூரி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை (Suicide) செய்துகொண்டார். ஆன்லைன் கேமில் ரூ.14 லட்சம் இழப்பு.. 13 வயது சிறுவன் தற்கொலை..!
மாணவி தற்கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், தீக்ஷா கல்லூரிக்கு பேருந்தில் வந்து 16 மாணவர்களுடன் மதியம் 2 மணிக்கு தேர்வுக்கு புறப்பட்டுள்ளார். தேர்வு முடிந்ததும், மற்ற மாணவர்கள் வெளியேறினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(The above story first appeared on LatestLY on Sep 19, 2025 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

