Hanging | Death File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 18, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன், ஆன்லைன் விளையாட்டில் (Online Game) மிகுதியான ஆர்வத்துடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.14 லட்சத்தை முழுவதுமாக ஆன்லைன் கேமில் இலந்துள்ளார். 15வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

சிறுவன் தற்கொலை:

இந்நிலையில், சிறுவனின் தந்தை வங்கிக்கு சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது, தனது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் மாயமானது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இதுகுறித்து வங்கி மேலாளரிடம் புகார் அளித்த விசாரித்தபோது, உண்மை நிலவரம் தெரியவந்தது. சிறுவனின் தந்தை வீட்டிற்கு சென்று, தனது குடும்பத்தினரிடம் விஷயத்தை தெரிவித்து, மகனை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.