Metro Shocking: டெல்லி மெட்ரோவில் அடுத்த சம்பவம்; அவசரப்படுத்திய சிறுநீரை கேனில் கழித்த பயணி.!
10 பிரிவுகளில், 350 கி.மீ தூரத்தை 256 இரயில் நிலையங்களை கொண்டு இணைத்து மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுகிறது.
நவம்பர் 01, டெல்லி (Social Viral): இந்தியாவின் தலைநகர் டெல்லியில், மக்களின் விரைவு போக்குவரத்தை உறுதி செய்ய மெட்ரோ இரயில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்களை மெட்ரோ கையாண்டு வருகிறது.
10 பிரிவுகளில், 350 கி.மீ தூரத்தை 256 இரயில் நிலையங்களை கொண்டு இணைத்து மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுகிறது. டெல்லி மெட்ரோவில் சில ஆண்டுகளாகவே ஆபாச உடையில் கவர்ச்சி நடனம், அந்தரங்க செயல்பாடுகள், இரயிலேயே உல்லாசம் என அவ்வப்போது சர்ச்சை வீடியோக்கள் வெளியாகி வந்தன. Noida Shocker: கள்ளக்காதல் வயப்பட்ட 57 வயது கட்டிட ஒப்பந்ததாரர் கழுத்தறுத்து கொடூர கொலை; கணவன்-மனைவியாக வெறிச்செயல்.!
இந்த நிலையில், டெல்லி மெட்ரோவில் பயணித்த ஒருவர் சிறுநீரை அடக்க இயலாமல், அதனை கேனில் பிடித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை படம்பிடித்தவர் மெட்ரோ ரயில் பயணத்தில் இவ்வாறு செய்யலாமா? என்று கேட்டவாறு வீடியோ எடுக்கிறார்.
ஆனால், அவரின் தனிப்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக இவ்வாறான செயலை அவர் செய்திருக்கலாம். இதனை எதற்காக வீடியோ எடுத்து பதிவிட வேண்டிய அவசியம் என்ன? என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுநலன் கருதி வீடியோ நமது பக்கத்தில் இணைக்கப்படவில்லை.
(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

