ஜனவரி 10, சிம்டிகா (Jharkhand News): ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டிகா (Simdega) மாவட்டத்தில் உள்ள ஜல்டிகா கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரிடம் அவரது 20 வயதான உறவினர் ஒருவர், மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி வீட்டில் இருந்து சிறுமியை அழைத்துச் சென்று, அருகிலுள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்குள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். Heart Wrenching Horror: கணவன் - மனைவி, 3 மழலைகள் என ஐவர் கழுத்தறுத்து கொலை?; வீட்டில் மீட்கப்பட்ட சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்.!
சிறுமி பாலியல் வன்கொடுமை:
இதில், சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094.
ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3