ஜனவரி 10, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், சுகைல் கார்டன் காலனி பகுதியில் வசித்து வருபவர் மியுன். இவரின் மனைவி ஆஸ்மா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. ஆஸ்மா கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
வாடகை வீட்டில் தம்பதி:
இவர்களின் அன்புக்கு டையாளமாக ஆப்ஸா (வயது 8), ஆசியா (வயது 4) மற்றும் அபிதா (வயது 1) என 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது இவர்கள் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருவதால், தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று மியுனின் சகோதரர் சலீம், தனது அண்ணனின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இதையும் படிங்க: சேலம் பெண் திருப்பதியில் உயிரிழந்த விவகாரம்; கணவர் கண்ணீர் பேட்டி.!
கதவை உடைத்தனர்:
அப்போது, இவர்கள் தங்கியிருந்த வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. பலமுறை அவர்களை அழைத்தும் சத்தம் இல்லை. செல்போனில் தொடர்புகொண்டும் பலன் இல்லை. இதனால் சந்தேகமடைந்த சலீம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
தம்பதி, குழந்தைகளின் சடலம்:
அச்சமயம், மியுன் - ஆஸ்மா ஆகியோர் கழுத்தப்பட்ட நிலையில், படிக்கப்பட்டு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். 3 குழந்தைகளும் மரப்பெட்டி ஒன்றில் கழுத்தறுத்து கொல்லப்பட்டு சடலமாக இரத்த வெள்ளத்தில் கிடந்தன. இதனைக்கண்டு அதிர்ந்துபோன மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலையா? தற்கொலையா?
தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஐவரின் உடலையும் மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்ததால் கொலையா? தற்கொலையா? என மர்மம் நீடிக்கிறது.
குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்ட பெட்டி:
Five members of a family including parents and three daughters brutally killed in Meerut. Bodies of mother and children stuffed inside the bed compartment. Cops say all hit by hard object. @Uppolice @timesofindia pic.twitter.com/lIMR4QLSu5
— Sandeep Rai (@RaiSandeepTOI) January 9, 2025