ஜனவரி 28: டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் (Cariappa Ground, Delhi) வைத்து இந்திய தேசிய மாணவர் படையின் (National Cadet Corps) 75வது ஆண்டு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 196 அதிகாரிகள் பிரதமர் மோடி முன்பு தங்களின் அணிவகுப்பை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி (Narendra Modi), 75 ரூபாய் நாணயத்தை இந்திய மக்களின் முன்பு வெளியிட்டார். இந்த நாணயம் விரைவில் வங்கிகள் வாயிலாக மக்களை சென்றடையும். நிகழ்வில், "NCC உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 75 ஆண்டுகளாக என்சிசியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள், அதில் அங்கம் வகித்தவர்கள், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். NCC படையினரின் உறுதிப்பாடு மற்றும் சேவை மனப்பான்மையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது" என பிரதமர் புகழுரைத்தார். Ranbir Kapoor Oppo India Truth: எல்லாம் விளம்பரத்திற்காகவா கோபால்?.. ரன்பீர் கபூரின் கோபமும், ஓப்போவின் மார்க்கெட்டிங் யுக்தியும்.!
Delhi | Prime Minister Narendra Modi releases a special day cover and a commemorative specially minted coin of Rs 75 denomination, commemorating 75 successful years of NCC. pic.twitter.com/Z1mKP8e2cA
— ANI (@ANI) January 28, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)