டிசம்பர் 17, பாவ்நகர் (Gujarat News): குஜராத் மாநிலம், பாவ்நகர் (Bhavnagar) மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 17) காலை விபத்து ஏற்பட்டது. தனியார் பேருந்தும் டிப்பர் லாரியும் (Bus-Lorry Accident) நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தின் வலது முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். Students Dies By Suicide: தேர்வு தோல்வியால் மாணவர் விவரீத முடிவு.. துடிதுடித்துப்போன குடும்பத்தினர்..!
இதுகுறித்த விசாரணையில், பாவ்நகரில் இருந்து மஹுவா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது, காலை 6 மணியளவில் த்ரபஜ் கிராமத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து:
Bhavnagar માં ત્રાપજ નજીક ભયાનક અકસ્માત, 6 લોકોનાા મોત#bhavnagar #accident #privatebus #truck #death #injury #gujarat #gujaratinews #gujaratibusinessnews #business #businessnews #cnbcbajar pic.twitter.com/LmDZRisipd
— CNBC Bajar (@CNBCBajar) December 17, 2024