டிசம்பர் 17, ஹமீர்பூர் (Himachal Pradesh News): இமாச்சல பிரதேச மாநிலம், ஹமிர்பூர் (Hamirpur) மாவட்டத்தில் உள்ள கல்யாண கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் (வயது 17). இவர், அங்குள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 15) இரவு வீட்டில் அவரது அத்தை சாப்பிட அழைத்துள்ளார். அவர் இருந்த அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய அத்தை, பங்கஜுக்கு செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். Wife Kills Husband: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. காட்டிக் கொடுத்த 5 வயது மகன்..!
அவர் நீண்டநேரமாகியும் போனை எடுக்காததால் வீட்டில் இருந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பதற்றமடைந்தனர். உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அறை கதவை உடைத்தனர். அப்போது, அவர் தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
ஆண்கள் உதவி எண்கள்:
மிலாப்: 9990588768; அகில இந்திய ஆண்கள் உதவி எண்: 9911666498; ஆண்கள் நல அறக்கட்டளை: 8882498498; வாஸ்தவ் அறக்கட்டளை: 8424026498.