Murder Blood (Photo Credit: Pixabay)

ஜனவரி 24, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள சரத்சந்திரபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராய்பரி சிங். இவருக்கு, ரோஹிதாஸ் மற்றும் லஷ்மிகாந்த் சிங் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய (ஜனவரி 23) தினம், ரோஹிதாஸ் தனது தாய் ராய்பரி சிங்கிடம் 10 கிலோ அரிசி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், அவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. Child Brutally Murder: குடும்ப பகை காரணமாக 2 குழந்தைகள் கொடூரக் கொலை; வாலிபர் வெறிச்செயல்..!

கோடாரியால் வெட்டிக் கொலை:

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரோஹிதாஸ், கோடாரியை எடுத்து தனது தாயை (Murder)தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த ராய்பரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர், அதே கோடாரியை வைத்து, தனது கழுத்தை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், லஷ்மிகாந்த் வீட்டிற்கு வந்த போது, அங்கு தாய் உயிரிழந்த நிலையிலும், சகோதரர் காயங்களோடும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காவல்துறையினர் விசாரணை:

இதனையடுத்து, படுகாயமடைந்த ரோஹிதாஸை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு லஷ்மிகாந்த் புகார் அளித்தார். புகாரின் பேரில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரோஹிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.