அக்டோபர் 08, கன்னோஜ் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கன்னோஜ் (Kannauj) மாவட்டத்தில் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தல்கிராம் நகரத்தின் ஒரு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது கணவர் டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதே பகுதியில், பணியமர்த்தப்பட்ட கான்ஸ்டபிள் (Constable) உமேஷ் சந்திராவும் வாடகை வீட்டில் வசிக்கிறார். Coal Mine Accident: நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து.. 6 பேர் பலி.., பலர் படுகாயம்..!
இந்நிலையில், நேற்று முன்தினம் (அக்டோபர் 06) இரவு கான்ஸ்டபிள் உமேஷ் சந்திரா, குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். மேலும், அவரிடம் பாலியல் அத்துமீறலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் சத்தமிட்டு கத்தியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் வந்து விரட்ட அவர் அங்கிருந்து தப்பி ஓடும்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், குற்றம்சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் உமேஷ் சந்திராவை எஸ்பி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட காவலர் பணியிடை நீக்கம்:
कन्नौज में 6 अक्टूबर की रात शराब के नशे महिला से छेड़छाड़ के दोषी PRV सिपाही उमेश चंद्र को एसपी ने किया बर्खास्त। #Kannauj #UPPolice @NBTLucknow pic.twitter.com/jX7QMwJo3x
— Praveen Mohta (@MohtaPraveenn) October 8, 2024