அக்டோபர் 08, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்கத்தின் பிர்பும் (Birbhum) மாவட்டத்தில் லோக்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பதூலியா பகுதியில் நிலக்கரி சுரங்கம் (Coal Mine) உள்ளது. இங்கு நிலக்கரி எடுப்பதற்காக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 07) வெடிபொருட்களை பயன்படுத்தும் போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து (Explosion) ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Kolkata Model Sexual Harassment Case: மாடல் அழகி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 2 பேர் கைது.., 4 பேர் தலைமறைவு..!
இதனையடுத்து, வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 30 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.