Vedhanth Madhavan: மலேஷிய மண்ணில் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை இந்தியாவுக்காக வென்ற தமிழ் நடிகரின் மகன்..!

கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவிற்காக 5 பதக்கங்களை வென்றெடுத்த பிரபல தமிழ் நடிகரின் 17 வயது மகனின் சாதனையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Vedhanth Madhavan: மலேஷிய மண்ணில் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை இந்தியாவுக்காக வென்ற தமிழ் நடிகரின் மகன்..!
Vedaant Madhavan, Victory 5 Gold Awards to India; Venue at Malaysian invitational Championship Tournament, Kuala Lumpur, Malaysia (Photo Credit: Twitter)

ஏப்ரல் 17, (Sports News): தமிழ் திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த நடிகர் மாதவன் (Actor Madhavan), தற்போது குறைந்த படங்களிலேயே நடித்து வந்தாலும் அவை மக்களிடையே வரவேற்பை பெற்றன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடித்த இறுதி சுற்று பல விருதுகளை வென்றது. விக்ரம் வேதா திரைப்படம் அவரின் துவண்டுபோன திரை வாழ்க்கையை மீண்டும் தட்டியெழுப்பும் வகையில் இருந்தது. Fumio Kishida: ஜப்பான் பிரதமரை கொலை செய்ய சதி?.. நூலிழையில் உயிர்தப்பிய பிரதமர்.!

நடிகர் மாதவனுக்கு சரிதா பிர்ஜி (Sarita Birje) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு வேதாந்த மாதவன் (Vedaant Madhavan) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 17 வயது ஆகிறது.

இந்நிலையில், மலேஷிய (Malaysia) நாட்டில் உள்ள கோலாலம்பூரில், மலேஷிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட வேதாந்த மாதவன் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, 1500 மீ அளவிலான போட்டிகளில் வெற்றி அடைந்து 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).