Car Accident: நடைப்பயிற்சி சென்ற 2 பெண்கள், பச்சிளம் குழந்தை பலி; நெஞ்சை பதறவைக்கும் விபத்து வீடியோ.!

வளைவான பகுதியில் வேகமாக வந்த கார் தறிகெட்டு இயங்கியதால் நெஞ்சை பதறவைக்கும் விபத்து ஏற்பட்டது.

Car Accident: நடைப்பயிற்சி சென்ற 2 பெண்கள், பச்சிளம் குழந்தை பலி; நெஞ்சை பதறவைக்கும் விபத்து வீடியோ.!
Accident CCTV Visual (Photo Credit: Twitter)

ஜூன் 04, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பந்துலகுடா பகுதியில், இன்று காலை 2 பெண்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை என 3 பேர் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.

வளைவான பகுதியில் இவர்கள் சென்றபோது, அப்பகுதி வழியே பயணித்த கார் அதிவேகத்தில் வழுக்கியபடி வந்தது. இந்த வாகனம் சற்றும் எதிர்பாராத விதமாக மூவரின் மீது மோதியது.

திரைப்பட பாணியில் நடந்த விபத்தில் இவர்களில் மூவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களுக்கு முன்புறம் சென்றுகொண்டிருந்த 6 பேர் காயமடைந்தனர். Shanghai Cooperation Summit 2023: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளை இந்தியா கூட்டுக்குடும்பமாக பார்க்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்.!

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், சாந்தி நகர் காலனி பகுதியில் வசித்து வரும் பெண்மணி, தனது குழந்தை மற்றும் உறவினர் பெண்ணுடன் நடைப்பயிற்சி வரும்போது விபத்து நடந்தது உறுதியானது.

அவர்கள் அனுராதா, மமதா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 7 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பி சென்றுவிட, அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 04, 2023 08:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).