Shanghai Cooperation Organization Summit 2023 (Photo Credit: ANI)

ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உட்பட பல நாடுகளை அங்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு (Shanghai Cooperation Organization - SCO) அமைப்பின் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பு நாடுகள் தங்களின் அரசியல், பொருளாதார, சர்வதேச பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கும். Elon Musk Action Over Twitter: எலான் மஸ்குக்கு செக் வைத்த மார்க்.. பதறியடித்து சுதாரித்த எலான் மஸ்க்.. காரணம் இதோ.! 

இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி (PM Narendra Modi) பேசுகையில், "நாங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை வெளிப்புறமாக கருதவில்லை. மாறாக ஒரு கூட்டு குடும்பமாக பார்க்கிறோம். பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, இணைப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை எஸ்.சி.ஓ-வுக்கான எங்கள் பார்வையின் தூண்கள்" என பேசினார்.