College Girl Suicide (Photo Credit: @manaverindiapmk X)

ஜனவரி 06, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ருத்ரராம் நகரில், கீதம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.டெக் துறையில் பயின்று வரும் மாணவி ரேணு ஸ்ரீ (வயது 18). இவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது, கீதம் பல்கலை.,யின் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

மாணவியின் விபரீத முடிவு: இந்நிலையில், நேற்று மதியம் 03:45 மணியளவில், தனது பல்கலைக்கழக வளாகத்தில், 6வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு இருந்தவர் அவர் தற்கொலைக்கு (College Girl Suicide) முயற்சித்து, கட்டிடத்தின் விளிம்பு பகுதிக்கு வந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு நபர், அவரின் செயலை தூரத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி: அச்சமயம் கல்லூரி மாணவி கட்டிடத்தின் 6வது தலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவி கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், உடனடியாக அவரை மீட்டு பதன்செரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். Global Investors Meet: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ரூ. 5.5 இலட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் தமிழ்நாடு..! புதிய சாதனை படைக்க அரசு வியூகம்! 

காவல்துறையினர் விசாரணை: அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

தற்கொலை எண்ணம் தீர்வாகாது: இன்றளவில் உள்ள இளம் தலைமுறை எதற்கும் தற்கொலை என்ற எண்ணத்தை எடுத்துக்கொள்கிறது. உயிரை மாய்ப்பது நொடியில் நடந்துவிடும். அது உங்களை அன்பாக நேசிக்கும் பெற்றோருக்கு மரணத்தை விட பெரிய வலியை கொடுக்கும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை சரி செய்து முன்னேற வழி உண்டு. அதனை தேடுவதே நல்லது.

அதிர்ச்சி வீடியோ உங்களின் பார்வைக்கு: