ஜனவரி 05, சென்னை (Chennai): தமிழகத்தில் பல பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஏறத்தாழ இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து படித்து வெளியேறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதைக் குறைத்துக்கொண்டே வருகிறது. எனவே, இந்த சூழலில் அனைவருக்கும் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமாக மாறியுள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அதனை சவாலாக்கி இருக்கிறது. இருப்பினும், அரசு பல்வேறு வழிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முயல்கிறது.
கற்றல் திறனை மேம்படுத்த நான் முதல்வன் திட்டம்: அந்த வகையில், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தேவைப்படும் திறன்களை மாணவர்கள் கல்லூரிகளில் படிக்கின்ற போதே வளர்த்துக் கொள்ள வசதியாக, முதல்வர் மு.க ஸ்டாலினால் "நான் முதல்வன் திட்டம்" (Naan Mudhalvan) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் ஆண்டிலேயே 13 லட்சம் பேர் பயின்று பலன் அடைந்தனர். தொடர்ந்து, அரசானது இன்னமும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க பல்வேறு திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது. Actor Suriya Tribute To Vijayakanth: விஜயகாந்த் போல யாருமே இல்லை... கதறி அழுத சூர்யா..!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: இந்நிலையில், தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை (Global Investors Meet Chennai) நடத்த உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாணவர்கள் மற்றும் தொழில் துறையின் அனைத்து தரப்பினரை பங்கு பெறச் செய்வது தான் அரசின் நோக்கம் ஆகும். இந்த மாநாட்டிற்காக சென்னையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் அனைத்திற்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருக்கக்கூடிய முக்கிய நிறுவனங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன. இதுவரை இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், தொழில் கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என சுமார் 15,000 பேர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளைவிட அதிக முதலீட்டுக்கு இலக்கு: இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. அதுவும் தமிழக அரசானது ரூ. 5.50 இலட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே இதுபோன்ற மாநாடுகள் இரண்டு முறை தமிழ்நாட்டில் நடந்துள்ளது எனினும், முந்தைய முதலீடு ஈர்ப்பை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக முதலீடு ஈர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே மாணவர்களுக்கு தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி நிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். அதற்காக இந்த மாநாட்டினை அனைவரும் காணும் வகையில், தமிழக அரசு தனது இணையதளத்தின் மூலம் இந்த மாநாட்டை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. Realme 12 Pro Mobile: அசத்தலான மொபைலை வெளியிடும் ரியல்மி... அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
முதல்வரின் வரவேற்பு பதிவு: இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அது குறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல் திட்டத்தை உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடத் தமிழ்நாடு மும்மரமாகிறது. தமிழ்நாட்டின் துடிப்பு மிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரம்மாண்டமான மாநாட்டில் வரும் ஜன 7, 8 தேதிகளில் இணைந்திடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
Excitement is building as the countdown to #GIM2024 begins!
Tamil Nadu gears up to unveil its 'Roadmap to achieve $1 trillion by 2030' at the Global Investors Meet.
Join us on January 7-8 for a two-day extravaganza showcasing the vibrant industrial ecosystem of Tamil Nadu.🌟… https://t.co/x7iTavI3E4
— M.K.Stalin (@mkstalin) January 1, 2024