AP Election Results 2024: ஆட்சி மாற்றத்தை சந்திக்கும் ஆந்திர பிரதேசம்; வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் நடைபெற்று வந்த ஆட்சியானது, 2024 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மாறுவது உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடியும் தனது முதல் வாக்குகளை பதிவு செய்துள்ளார்.

PM Narendra Modi Chandra Babu Naidu (Photo Credit: Facebook)

ஜூன் 04, திருப்பதி (Andhra Pradesh News): ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்தியா தேர்தல்கள் 2024 , ஏழுகட்டமாக நடைபெற்று முடிந்து இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. மதியம் 02:30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 293 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 233 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. மக்களவை தேர்தலுடன் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

ஆந்திரப்பிரதேசம் சட்டப்பேரவை நிலவரம்: இந்நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி - பாஜக கூட்டணி கட்சிகள் 152 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என தெலுங்கு தேசத்துடன் மாநில அளவில் பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா தளம் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இதனையடுத்து, ஆந்திராவில் பெரும்பான்மை வாரியாக தெலுங்கு தேசம் - ஜனசேனா - பாஜக வெற்றி அடைந்து ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. Kangana Raaut Victory: 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை கங்கனா ரணாவத் அமோக வெற்றி.! 

முடிவுக்கு வரும் ஜெகன்மோகன் ஆட்சி: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாஜக தலைமையில் அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நீண்ட போராட்டத்திற்கு பின் ஆட்சியை பிடித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவிலான ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வருகிறது.

பாஜக கூட்டணி உடைக்க சதி: அதேவேளையில், பாஜகவிடம் இருந்து தெலுங்கு தேசத்தை பிரித்து, மத்திய அளவில் ஆட்சியை கைப்பற்ற மாநில அளவில் வெற்றிபெற்றுள்ள அணிகளிடம் காங்கிரஸ் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரியவருகிறது. இவ்வாறான முடிவு தேர்தல் வெற்றியில் எதிரொலிக்கும் என்பதால், தனிப்பெரும்பான்மை அடையாத பாஜகவின் ஆட்சிக்கு அது பெரும் தலைவலியாகவும் மாறும்.

தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அம்மாநிலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் 09ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வாழ்த்துக்களை ஆந்திர பிரதேசம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement