Bihar Exit Poll 2025 (Photo Credit: Team LatestLY)

நவம்பர் 11, பாட்னா (Bihar News): பீகார் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 06ம் தேதியும், இரண்டாவது கட்டமாக இன்று (நவம்பர் 11) 122 தொகுதிகளுக்கும் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் பதிவுகளின்படி, 2008ம் ஆண்டுக்குப்பின் நடப்பு ஆண்டிலேயே அதிகப்படியான வாக்குப்பதிவு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு இருந்தது. மொத்தமாக 243 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வெற்றிக்கு 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். Delhi Blast: மருத்துவர்களின் சதித்திட்டம்.. டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் உறுதி.. இந்தியாவையே அதிரவைத்த சம்பவத்தின் பகீர் பின்னணி.! 

பீகார் மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் (Bihar Assembly Election Exit Polls):

தற்போது தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப்பெரும்பான்மை வெற்றி அடைந்து ஆட்சியை பிடிக்கிறது. பீகார் மாநிலத்தை பொறுத்த வரையில் நிதிஷ் குமார் யாதவ் பாஜக கூட்டணியிலும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியிலும் இடம்பெற்று இருந்தார். இவர்களுக்கு போட்டியாக பீகாரில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரும் தனித்து 243 தொகுதியிலும் களம்கண்டு இருந்தார்.

பாஜக கூட்டணிக்கு வெற்றி:

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் யாதவ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடைந்து, நிதிஷ் குமார் யாதவ் முதல்வராக அரியணை ஏறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாதகமான சூழலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவித்துள்ளன. என்.டி.டி.வி, டைம்ஸ் நவ், ஏபிபி, நியூஸ் 18 சி வோட்டர், தி பீப்புள் பல்ஸ், தினக் பாஸ்கர் என பல முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, பாஜக தலைமைலயிலான கூட்டணிக்கு 145 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 70 முதல் 100 இடங்களில் வெற்றி இருக்கலாம். பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு ஒரு தொகுதியில் கூட இல்லை. எஞ்சிய கட்சிகள் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் 5 முதல் 10 தொகுதிகளை கைப்பற்றலாம்.